ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி; 37 அணிகள் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 37 அணிகள் பங்கேற்றன.

Update: 2021-11-20 21:29 GMT
ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 37 அணிகள் பங்கேற்றன.
மாவட்ட கைப்பந்து போட்டி
ஈரோடு மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து சாம்பியன்சிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 37 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் 28 அணிகளை சேர்ந்த வீரர்களும், பெண்கள் பிரிவில் 9 அணிகளை சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பரிசளிப்பு விழா
போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், சேர்மன் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசு மற்றும் சாம்பியன் கோப்பையை வழங்குகிறார்கள்.
ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சாம்பியன் கோப்பையும், 2, 3, 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் சாம்பியன் கோப்பையும், 2, 3, 4-ம் இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000-ம் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்