நாகராஜா கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சி

நாகராஜா கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சி

Update: 2021-11-20 21:17 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டும் நிகழ்ச்சி நேற்று காலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் கணக்கர் சிதம்பரம் பிள்ளை மற்றும் ஸ்ரீஆனந்த கிருஷ்ணன், பக்த சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மேலும் செய்திகள்