தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் சிவாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஒரு முதியவர் நேற்று இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த முதியவர் நல்லம்பள்ளி அருகே உள்ள கந்துகால்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி (வயது 73) என தெரியவந்தது. இவர் சற்று மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 1 மாதம் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இவர் ரெயில் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி பலியாகி இருப்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.