நெல்லை டவுனில் மின்னொளியில் ஜொலிக்கும் ஆர்ச்
நெல்லை டவுனில் உள்ள ஆர்ச் மின்னொளியில் ஜொலித்தது.
நெல்லை:
நெல்லை டவுனில் முக்கிய அடையாளமாக ‘ஆர்ச்’ விளங்கி வருகிறது. நெல்லையப்பர் கோவில் முன்பு இருந்து சற்று தொலைவில் இந்த ஆர்ச் அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றி இந்த ஆர்ச்சை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தாலும், ஆர்ச் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறி பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்ச் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது.
மேலும் அதன் மீது அலங்கார மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன. இதையொட்டி புதுப்பொலிவு பெற்றுள்ள ஆர்ச் வண்ண மின்விளக்குகளால் நேற்று இரவு ஜொலித்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.