மழையால் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்தன

மழையால் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

Update: 2021-11-20 19:56 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. ஆனால் நேற்று பகல் நேரத்தில் மழை பெய்யவில்லை. வெயில் அடித்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அம்மாபாளையம் தேவேந்திர குல தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க மண்சுவரும், அம்மாபாளையம் வன்னிமலை பகுதியை சேர்ந்த சாரதா என்பவரின் ஓட்டு வீட்டின் பின்பக்க சுவரும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசின் நிவாரண தொகை பெற்றுத்தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்