கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு
அரக்கோணம் பகுதியில் தொடர்மழையால் 11 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் தொடர்மழையால் 11 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது.
அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சர்தார் சாயுபு கூரை வீட்டின் 3 பக்க சுவர்களும் இடிந்து விழுந்தன. மேலும் ஆத்தூர் கிராமத்தில் அமுதா, இராமாபுரத்தில் லட்சுமி, மிட்டபேட்டை இருளர் காலனியில் அர்சுனன், கடம்பநல்லூர் அண்ணா நகர் ராஜேந்திரன், வாணியம்பேட்டை இருளர் காலனி சந்திரா, தேசம்மாள், ரமணி ஆகியோர் வசிக்கும் கூரை வீடுகளின் ஒரு பகுதியும், கும்மினிபேட்டை அருந்ததிபாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள், மிட்டபேட்டையை சேர்ந்த சித்ரா ஆகியோரின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதியும் சித்தூர் கிராமம் மணந்தாங்கலை சேர்ந்த வேலு, ஓட்டு வீட்டின் மேல் கூரை பகுதி இடிந்து விழுந்தது.
எனினும் பொருட் சேதமோ உயிர்ச் சேதமோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களுடன் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.