அகத்தீஸ்வரர் கோவில் சுவர் இடிந்து விழுந்தது

வாலாஜா அருகே பலத்த மழையால் அகஸ்தீஸ்வரர் கோவில் சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2021-11-20 19:16 GMT
வாலாஜா

வாலாஜா அருகே பலத்த மழையால் அகஸ்தீஸ்வரர் கோவில் சுவர் இடிந்து விழுந்தது.

வாலாஜா வன்னிவேடு பாலாற்றங்கரை பகுதியில் அகத்திய முனிவர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. பலத்த மழை காரணமாக கோவிலின் சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதனை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இடிந்து விழுந்த சுவரை புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடப்பட்டது. 

அப்போது வாலாஜா ஒன்றிய குழுத்தலைவர் சேஷா வெங்கட் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்