ரூ.2 லட்சம் குட்கா வேனுடன் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் குட்கா வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடி வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அம்பலூர் சுங்கசாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து. அதனை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து அம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக வேன் உரிமையாளரான சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32), மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து அம்பலூர் போலீசார் ெதாடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.