சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விராலிமலை:
விராலிமலை தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமி வடமதுரையில் உள்ள தனியார் பஞ்சுமில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற சிறுமி மில்லுக்கு செல்லவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் விராலிமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த சிறுமிக்கு நாகப்பட்டினம் மாவட்டம், திருத்துறைபூண்டி நெடும்பலம் பகுதியை சேர்ந்த அருள் பிரசாத் என்கிற வடிவேல் (வயது 27) என்பவருடன் செல்போன் மூலமாக தொடர்பில் இருந்த தகவலையறிந்த விராலிமலை போலீசார் நேற்று திருத்துறைபூண்டிக்கு சென்று வடிவேலை அவரது வீட்டில் இருந்து விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.