தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி

சிவகாசி அருகே குளிக்க சென்ற போது தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2021-11-20 18:14 GMT
சிவகாசி,

சிவகாசி அருகே குளிக்க சென்ற போது தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

தடுப்பணை

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தடுப்பணைக்கு அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
 இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தடுப்பணை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து முத்துவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது முத்துவின் ஆடைகளும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. 

தீயணைப்பு துறையினர் தேடினர்

இதை தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவை தேடினர். சுமார் 4½ மணி நேர தேடுதலுக்கு பின்னர் முத்துவின் உடல் கிடைத்தது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தடுப்பணையில் குளித்த போது நீரில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என ேபாலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்