இன்று 10-வது மெகா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த முகாம் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முகாம்களில் தடுப்பூசி போடப்படும். முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் இந்த முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.