வாகனம் மோதி தொழிலாளி சாவு
ராதாபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வள்ளியூர்:
ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தயாளன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வள்ளியூரில் இருந்து சமூகரெங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். தெற்கு கள்ளிகுளம் அருகே சென்றபோது, அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தயாளன் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தயாளன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.