மகளிர் போலீஸ் நிலையம் எதிரே இறந்து கிடந்த மின்வாரிய ஊழியர்

மகளிர் போலீஸ் நிலையம் எதிரே மின்வாரிய ஊழியர் இறந்து கிடந்தார்.

Update: 2021-11-19 19:57 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடை அருகே நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் துறைமங்கலத்தை சேர்ந்தவரும், பெரம்பலூர் மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்தவருமான குணசேகரன் (வயது 57) என்பது தெரியவந்தது. குணசேகரனுக்கு ஜமுனாராணி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, ஓசரப்பள்ளியில் உள்ள மாமியார் வீட்டில் அவர் தங்கியிருந்தார். கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்துக்கு கையெழுத்து போட வந்த அவர் பெரம்பலூரில் தங்கிவிட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அங்கு குணசேகரன் இறந்து கிடந்தது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் குணசேகரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்