தேங்கி நிற்கும் மழைநீர்

மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

Update: 2021-11-19 19:48 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு மகாராஜபுரம் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. தேங்கி நிற்கும் மழை நீரில் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே மாணவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்