தூக்குப்போட்டு பெண் தற்கொலை

காரியாபட்டியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-19 19:45 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் விஜயலட்சுமி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். விஜயலட்சுமி உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் மாடியில் விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்