இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய தையல் ஊசி அகற்றம்

கோவையில் இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய தையல் ஊசியை அறுவை சிகிச்சை செய்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினர்.

Update: 2021-11-19 17:51 GMT
கோவை

கோவையில் இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய தையல் ஊசியை அறுவை சிகிச்சை செய்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்  அகற்றினர்.

கழுத்துக்குள் குத்திய தையல் ஊசி

கோவை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 2-ந் தேதி கோவை தியாகராய வீதியை சேர்ந்த 19 வயது பெண் கழுத்தில் காயங் களுடன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கழுத்தின் வெளிப்புற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த பெண் தனக்கு கழுத்து பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாக கூறினார்.

உடனே டாக்டர்கள், அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியை சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அதில், கழுத்தில் மூச்சுக்குழாயில் இருந்து, கழுத்து தண்டுவட பகுதியில் மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கிய ரத்த நாளத்தின் அருகில் மிகவும் சிக்கலான இடத்தில் ஊசி சொருகியது போல் இருந்தது தெரியவந்தது. இது பற்றி அந்த இளம்பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்தனர். அதற்கு அந்த இளம்பெண், தான் தற்கொலை செய்வதற்காக நீளமான தையல் ஊசியை எடுத்து கழுத்தில் குத்திக் கொண்டதாக கூறினார்.

அறுவை சிகிச்சை

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அந்த இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்தி இருந்த நீளமான தையல் ஊசியை நுட்பமாக அகற்றினர். இது குறித்து ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறுகையில், இளம்பெண்ணின் கழுத்துக்குள் சவாலான இடத்தில் 7.5 செ.மீ. நீள தையல் ஊசி குத்தி இருந்ததை டாக்டர்கள் குழுவினர் கண்டறிந்தனர்.

பின்னர் டாக்டர் கள் அறுவை சிகிச்சை செய்து, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய், தண்டுவட பகுதி நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஊசியை அகற்றி சாதனைபடைத்துள்ளனர்.தற்போது அந்த இளம்பெண் நலமாக உள்ளார் என்றார்.

மேலும் செய்திகள்