25-ந்தேதி மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Update: 2021-11-19 17:16 GMT
ராமநாதபுரம், 
கடந்த ஆகஸ்டு மாதம் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய வர்கள் மற்றும் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப் பித்தவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பட்டியல் வருகிற 25-ந்தேதி அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே வழங்கப்படும்.மேலும் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய நடை முறையில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளுக்கு தலா 600 மதிப்பெண்களுக்கு 2 மார்க்சீட்டுகள் தனித்தனியாக வழங்கப்படும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி அடையாத வர்களுக்கு இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் ஒரே பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவுடன் தனித்தனி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். பழைய நடைமுறையில் மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய அனைத்து பாடத் திலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பதிவு எண்ணுடன் ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். நிரந்தர பதிவு எண் இல்லாமல் மார்ச் 2016 பொதுத் தேர்வுக்கு முந்தைய நடைமுறையில் பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களுக்கு எழுதிய பாடங்களுக்கு மட்டும் மார்க் சீட் வழங்கப்படும்.இந்த தகவலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்