உத்தமபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆர்.டி.ஓ. ஆய்வு

உத்தமபாளையம் அருகே அரசுப்பள்ளியில் ஆர்.டி.ஓ. கவுசல்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-19 16:48 GMT
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா நேற்று பட்டா மாறுதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கோம்பை கிராமத்திற்கு சென்றார். செல்லும் வழியில் அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திடீரென்று சென்றார். அங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக தக்காளி சாதம் மற்றும் முட்டை வழங்கி கொண்டிருந்தனர். 
இதை பார்த்த ஆர்.டி.ஓ. மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது கொரோனா தடுப்பூசி குறித்து எடுத்துக்கூறி, இதுதொடர்பாக அவரவர் பெற்றோர், குடும்பத்தினருடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார். 
இந்த ஆய்வின்போது உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்