வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-19 16:47 GMT
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இதே பகுதியை சேர்ந்தவர் ஹரி பாலாஜி (20). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்கள் 2 பேரையும் சராமரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று சிறுமலை பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பாலமரத்துபட்டியை சேர்ந்த பிரசன்னா (26), தனபால் (25), கார்த்திக் (26) என்பதும் முன்விரோதம் காரணமாக மாணிக்கம், ஹரி பாலாஜியை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரசன்னா, தனபால், கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்