போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-11-19 15:49 GMT
காங்கேயம், 
வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது 28). இவர் அப்பகுதியில் தறி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துபிரகாஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்