திருப்பூருக்கு வருகிற 22ந் தேதி முதல்-அமைச்சர் முகஸ்டாலின் வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்
திருப்பூருக்கு வருகிற 22ந் தேதி முதல்அமைச்சர் முகஸ்டாலின் வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்
திருப்பூர்,
திருப்பூருக்கு வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அதற்காக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
முதல்-அமைச்சர் திருப்பூர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந் தேதி கோவையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அன்று மதியம் அவர் திருப்பூர் வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.
இடம் தேர்வு
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாவை நடத்துவதற்கு இடம் தேர்வு செய்ய ஆலோசனை மேற்கொண்டனர். அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகம் அல்லது தனியார் திருமண மண்டபம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விழா நடத்தலாம் என்று திட்டமிட்டு அந்த இடங்களை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். 1000 பேர் பங்கேற்கும் வகையில் இடவசதியுடன் கூடிய இடத்தை தேர்வு செய்ய ஆலோசித்து உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து முதல்-அமைச்சரின் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு அதன்பின்னர் உறுதி செய்யப்பட்டு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.