தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியதில் டிரைவர் பலி
நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலியானார்.
நாகூர்:
நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலியானார்.
பஸ் மீது மோதியது
நாகூர் புதுமனை தெரு 2-வது சாலையை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலை நாகூர் ெரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வேளாங்கண்ணியில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் நாகூருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
வடக்கு பால்பண்ணைச்சேரி அருகே வந்தபோது சாலையின் நடுவே படுத்திருந்த மாட்டின் மீது ஆட்ேடா ேமாதியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ தாறுமாறாக ஓடி எதிேர ெசன்னையில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி வந்த தனியார் பஸ் மீது மோதியது.
ஆட்டோ டிரைவர் பலி
இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஜெகபர் சாதிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான ஜெகபர் சாதிக் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர் பகுதியில் போக்குவரத்து இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் சுற்றித்திாியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.