ஜெய்பீம் பட விவகாரம்: திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ம.க.வினர் புகார் மனு
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்பட காட்சிகள் வன்னியர்கள் மனதை புண்படுத்தும்படி உள்ளதாக கூறி திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ம.க.வினர் புகார் மனு அளித்தனர்.
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்பட காட்சிகள் வன்னியர்கள் மனதை புண்படுத்தும்படி உள்ளதாக கூறி திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் வ.பாலா என்கி்ற பாலயோகி தலைமையில் மாநில துணை அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் குமார், விஜயகாந்த், மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட சட்ட பாதுகாப்பு செயலாளர் யோகானந்தம் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.