மலைரெயில் தண்டவாளத்தில் உலா வந்த காட்டுயானை
மலைரெயில் தண்டவாளத்தில் உலா வந்த காட்டுயானை
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே ஹில்குரோவ் ரெயில் நிலைய 14-வது மைல் பகுதியில் தண்டவாளத்தில் காட்டுயானை உலா வந்தது.
இதை அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் கண்டு பீதி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து காட்டுயானை அங்கிருந்து சென்றது.