ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Update: 2021-11-19 13:59 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 266 நிலையான தடுப்பூசி மையங்கள், 20 நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 286 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 9-ம் கட்ட முகாமில் 45 வயதுக்கு மேல் 195 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 199 பேர் என 394 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேல் 3 ஆயிரத்து 53 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 3 ஆயிரத்து 584 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 637 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டது. முகாமில் மொத்தம் 7 ஆயிரத்து 031 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்