மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு மதுரை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இன்று (வெள்ளிக்கிழமை), திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி அனைத்துப் பூக்களின் விலையும் நேற்று ஏற்றம் கண்டன.
குறிப்பாக ஒரு கிலோ மதுரை மல்லிகைப்பூ ரூ.1200, பிச்சிப்பூ ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.120, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.150, மரிக்கொழுந்து ரூ.200, அரளி ரூ.500 என விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது. திருக்கார்த்திகை தீப திருநாள் என்பதால் பூக்கள் வாங்க நேற்று கூட்டமும் அதிகமாக இருந்தது.
இந்த சீசனில் பூ விளைச்சல் குறைவாக இருந்துவரும் நிலையில், வரும்நாட்களில் பண்டிகை, சுபமுகூர்த்த தினங்கள் வர இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.