தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-18 20:10 GMT
சாலை சீரமைக்கப்படுமா?
கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கவிளை முதல் சித்தாலம் குளம் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஆல்வின், காக்கவிளை.
தடுப்புச்சுவர் தேவை
ஆரல்வாய்மொழி வடக்கூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் அதன் அருகில் தெப்பக்குளமும் உள்ளது. இந்திராநகர் தெருவில் உள்ள இந்த தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் சாலையோரம் தடுப்புசுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                      -தமிழரசு, ஆரல்வாய்மொழி.
பஸ் வசதி தேவை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பல கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், மழை குறைந்த பிறகு அனைத்து பகுதிகளுக்கும் பஸ்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், நாகர்கோவிலில் இருந்து தாழக்குடி வழித்தடத்தில் பஸ்போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
                                      -காளியப்பன், இறச்சகுளம்.
இடையூறான மின்கம்பம்
கருங்கல் தபால் நிலையம் சந்திப்பு பகுதியில் இருந்து  கொல்லன்விளை செல்லும் சாலை உள்ளது. தபால்நிலைய சந்திப்பில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின் கம்பத்தை சாலையோரத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                -ஜார்ஜ், கருங்கல்.
பயணிகள் இருக்கை
தக்கலை பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த இருக்கைகள் தற்போது சேதமடைந்து அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி மட்டுமே உள்ளது. இதனால், அங்கு வரும் முதியவர்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி சேதமடைந்த இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
                                       -முகம்மது சபீர், குளச்சல்.
எரியாத விளக்குகள் 
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நன்றிகுழி, மணத்திட்டை, காயிதேமில்லத்நகர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. சில மின்கம்பங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நரம் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பங்களையும், விளக்குகளையும் மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                            -சமியன்பிள்ளை, காயிதேமில்லத்நகர்.

மேலும் செய்திகள்