வேலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மழைநீர் வெளியே செல்லாமல் கோவிலிலேயே தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்ததால் கோவில் வளாகத்தில் மழைநீர் அதிகமாக தேங்கியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.