செட்டிகுளம் நிரம்பியது; விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

தொடர் மழையால் செட்டிகுளம் நிறைந்து விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தது.

Update: 2021-11-18 18:22 GMT
தோகைமலை,
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயிகள் சம்பா சாகுபடி அதிகளவில் செய்துள்ளனர். பயிர்கள் நடவு செய்யும் போது தலைச்சத்து, அடியுரம் போடப்பட்டது. பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து இருந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் செட்டிகுளம் நிறைந்து குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. 
இதனால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்