கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

உத்தமபாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2021-11-18 17:44 GMT
உத்தமபாளையம்: 

உத்தமபாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதற்கு கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா கர்ப்பிணிகளுக்கான சடங்குகளை செய்தார். 

பின்னர் கர்ப்பிணிகளுக்கு 6 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், உத்தமபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் முருகேசன், குமரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவழகன், மதன்குமார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்