கிணத்துக்கடவில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்
கிணத்துக்கடவில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்
கிணத்துக்கடவு
கார்த்திகை தீபத்தையொட்டி கிணத்துக்கடவில் அகல் விளக்கு கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் வெள்ளிக்கிழமை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் கோவில்களில் தீபங்கள் ஏற்றப்படும். இதற்காக பொதுமக்கள் அகல்விளக்குகள் வாங்குவது வழக்கம்.
கார்த்திகை தீபத்தையொட்டி கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையம், பஸ்நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
விற்பனை மும்முரம்
இந்த விளக்குகள் விதவிதமான வடிவங்களில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விளக்குகள் 2 ரூபாயில் இருந்து ரூ.50 வரை விற்பனையானது. இதனால் ஏராளமான பொதுமக்கள் இந்த அகல் விளக்குகளை வாங்கிச்சென்றதால் விற்பனை மும்முரமாக நடந்தது.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு தீபதிருநாளின்போது இருந்த அகல்விளக்கு அதிகளவில் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்றனர்.