கால்நடை மருத்துவமனையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
உத்தமபாளையம் அருகே கால்நடை மருத்துவமனைக்குள் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. உத்தமபாளையம் அருகே
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கோம்பை, பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களது ஆடு மற்றும் மாடுகளுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் உத்தமபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு கால்நடை மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. அந்த தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கால்நடை மருத்துவமனைக்கு ஆடு, மாடுகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கால்நடை மருத்துவமனையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.