தாராபுரம்
இந்துக்களின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீப திருவிழா. தீப திருநாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு கோவில்கள், வீடுகள் மற்றும் தொழிற்கூடங்களில் மாலை 6 மணிக்கு விளக்கேற்றி வழிபடுவது இந்துக்களின் வழக்கம். மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது சிறப்பு வாய்ந்ததாகும். அன்று இந்துக்கள் தங்கள் வசதிக்கேற்ப வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். இதற்காக சிலநாட்களுக்கு முன்பாகவே விளக்குகள் வாங்குவார்கள். ஆனால் இந்த வருடம் தாராபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் விளக்கு விற்பனை குறைந்தது. இந்த வருடம் ரூ.1 முதல் அதிக பட்சமாக 10 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தன.அவற்றை சிலரே வாங்கி சென்றனர். இந்த நிலையில் தீப திருநாளான இன்று வெள்ளிக்கிழமை விளக்குகள் அதிகமாக விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் மண்பாண்ட தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் உள்ளனர்.
.