விளாத்திகுளம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

விளாத்திகுளம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-18 10:38 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த திருமலை மகள் கவுரி (வயது 22). இவர் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். சம்பவத்தன்று இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்