மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

Update: 2021-11-17 21:37 GMT
மதுரை
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவிலும் நகர் மற்றும் புறநகர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், மதுரை பெருங்குடியை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் பாலு (வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்னல் தாக்கி பாலுவும், அவரது பசுமாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்