வாணியம்பாடியில் நீதிமன்ற வளாகம் கட்டும் இடத்தை கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் இடத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

Update: 2021-11-17 18:24 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 3 நீதிமன்றங்கள் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று மட்டுமே சொந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. மற்ற இரு கட்டிடங்களும் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. 

அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துத் தர வேண்டும், என பல ஆண்டுகளாக வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் ஏற்கனவே உள்ள நீதிமன்றம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது வழக்கறிஞர் சங்கத் தலைவர் பூபதி உள்ளிட்டோர் பொதுமக்களின் நலனுக்காகவும், வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத்துறை நலனுக்காகவும், இதே இடத்தில் நீதிமன்றம் அமைக்க ேவண்டும், எனக் கலெக்டரை ேகட்டுக் கொண்டனர். 

ஆய்வின்போது வாணியம்பாடி தாசில்தார் மோகன், நில அளவையர் பிரசாந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்