சபரிமலைக்கு மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி தேனி மாவட்டம் தேனி, ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அய்யப்பன் கோவில் மற்றும் இதர கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர். ஆண்டிப்பட்டியில் பால விநாயகர் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.