நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூரில் இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமை தாங்கினார்.
நடிகர் சூர்யா நடித்த திரைப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளதாக கூறி அதை கண்டித்தும், வன்னியர்களுக்கு அரசு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் எம்.மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் ராஜேந்திரன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் டி.கே.மலைச்சாமி, அந்தியூர் நகர தலைவர் சேகர், செயலாளர் மாதேஷ், அந்தியூர் ஒன்றிய துணைத் தலைவர் சேகர், பிரம்மதேசம் ஊராட்சி தலைவர் முனுசாமி, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் முனுசாமி உள்பட பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.