தச்சு தொழிலாளி வீட்டில் 5 பவுன் தங்கநகைகள் திருட்டு
தச்சு தொழிலாளி வீட்டில் 5 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43) தச்சு தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க சங்கிலி, அரைபவுன் தோடு, 3 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் செல்வகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.