கோவில்பட்டி, கழுமலை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

கோவில்பட்டி, கழுமலை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

Update: 2021-11-17 13:53 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி, எப்போதும் வென்றான் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகமது சாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகளுக்கும், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர் மற்றும் சூரங்குடி ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்