காயல்பட்டினத்தில், தொழில் செய்வதற்கு தந்தை கார் வாங்கி தராததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
காயல்பட்டினத்தில், தொழில் செய்வதற்கு தந்தை கார் வாங்கி தராததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில், தொழில் செய்வதற்கு தந்தை கார் வாங்கி தராததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மகன் நாராயணன் மினி லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நாராயணன் தனது தந்தை முருகேசனிடம் லாரி மூலம் தண்ணீர் அடிப்பதற்கு பதிலாக கார் வாங்கித் தந்தால் அதை வைத்து சொந்தமாக ஓட்டி தொழில் செய்யலாம் என்று கேட்டுள்ளார். சிறிது காலம் கழித்த பிறகு புதிதாக கார் வாங்கித் தருவதாகவும், அதுவரை குடிநீர் சப்ளை வேலையை பார்க்குமாறும் தந்தை கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த நாராயணன் கார் வாங்கி தருமாறு மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
தூக்கில் தொங்கினார்
தந்தை கார் வாங்கித்தராததால் மனமுடைந்து காணப்பட்ட நாராயணன், நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை பூட்டிக்கொண்டு வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். பதறிப்போன பெற்றோரும், உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் இருந்து அவரை இறக்கி காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளார்.
இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.