தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

சாத்தூர் அருேக தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-16 19:23 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டியில் வசித்து வந்தவர் மாரிச்சாமி (வயது 30). விவசாயி. இவர் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த சில தினங்களாக 50 ஆடுகள் வரை ஒன்றன் பின் ஒன்றாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மாரிச்சாமி நத்தத்துப்பட்டி ஆற்றங்கரையில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி  மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில்  இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்