வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

வேலூர்் நேதாஜி மார்க்கெட்டில் காய்்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Update: 2021-11-16 18:48 GMT
வேலூர்

வேலூர்் நேதாஜி மார்க்கெட்டில் காய்்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. 

அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்தது. அதனால் நேதாஜி மார்க்கெட்டிற்கு கடந்த வாரம் காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது. 
அதன்காரணமாக அனைத்து காய்கறிகள் விலையும் கிடு, கிடுவென உயர்ந்தன. 

இந்த நிலையில் தொடர் மழையால் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்து, அவற்றின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கத்தரிக்காய் சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தவாரம் கத்தரிக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. தக்காளி ரூ.70 முதல் 80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.50-க்கும், கேரட், பீன்ஸ் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இதைத்தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் முதல்தரம் ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக விற்கப்பட்டது. மளிகை மற்றும் சில்லரை விற்பனை காய்கறி கடைகளில் இவற்றை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனையானது. கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்