வால்பாறை மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை
வால்பாறையில் மழை காரணமாக மலைப்பாதையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் மழை
மலைப்பிரதேசமான வால்பாறையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. அதுபோன்று வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்தது. இதனால் இங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் தற்போது வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற் கிடையே, பரவலாக மழை பெய்தது. மழையுடன் பனிமூட்டமும் அதிகமாக இருந்தது.
மரம் விழுந்தது
இந்த மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பாதையில் 37 மற்றும் 38-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே சாலை ஓரத்தில் இருந்த மரம் காலை 6 மணிக்கு சாய்ந்து சாலையில் விழுந்தது.
இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. எனவே சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் அவர்கள் அந்த மரத்தை வெட்டியும், பொக்லைன் எந்திரம் மூலமும் அந்த மரத்தை சாலையில் இருந்து அப்புறப் படுத்தினார்கள். இதன் பின்னர் காலை 8.30 மணிக்கு போக்கு வரத்து சீரானது.
இதன் காரணமாக இந்த சாலையில் 2½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி யடைந்தனர்.