சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 22 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 22 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம்
விழுப்புரத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ்ந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக மொத்தமுள்ள 228 சாட்சிகளில் இதுவரை 142 சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மேலும் 5 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.