கோவில்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்தடை செய்யப்படுகிறது

கோவில்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்தடை செய்யப்படுகிறது

Update: 2021-11-16 14:35 GMT
கோவில்பட்டி:
விஜயாபுரி துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகின்ற 11 கிலோ வோல்ட் சூரியசக்தி மின் தொடர் அமைக்க இருப்பதால், மேற்படி 2 மின் தொடர்கள் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. 
எனவே கோவில்பட்டி ஊரகம் வினியோகபிரிவிற்கு உட்பட்ட சிவந்திபட்டி, கொப்பம்பட்டி, முடுக்கலாங்குளம், துறையூர், கரிசல்குளம், குருவிநத்தம், காமநாயக்கன்பட்டி, சால்நாயக்கன்பட்டி, மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, கார்த்திகைபட்டி, கழுகாசலபுரம், குருமலை, மும்மலைப்பட்டி, மற்றும் கோவில்பட்டி நகர் தெற்கு வினியோக பிரிவிற்கு உட்பட்ட கிழவிபட்டி, செண்பகப்பேரி, மேலபாண்டவர்மங்கலம், கெச்சிலாபுரம், அண்ணாமலை நகர், அன்னைதெரசா நகர், ராஜீவ்நகர் மேற்கு பகுதிகள், நரிக்குறவர் காலனி ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, கோவில்பட்டி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்