குடிபோதையில் வாகனம் ஓட்டிய 10 பேரிடம் அபராதம் வசூல்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 10 பேரிடம் அபராதம் வசூல்

Update: 2021-11-16 14:10 GMT
கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 10 டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்களை இயக்கியது தெரியவந்தது. 

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவர்களை போலீசார் கைது செய்து, கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு ஜெயபிரகாஷ் உத்தரவிட்டார். அபராத தொகையை வசூலித்த பிறகு வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மேலும் இனிமேல் குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்