வாணியம்பாடி- நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
தேசிய நெடுஞ்சாலையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சாலையின் குறுக்கே ஒரு இடத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. அதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் திரண்டு அந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மலைப்பாம்பு சாலையில் அங்கும் இங்குமாக நீண்ட நேரம் ஓடியது. இளைஞர்கள் நீண்ட நேரம் போராடி அந்த மலைப்பாம்பை பிடித்து சென்று காட்டில் விட்டனர்.