நெல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-15 19:28 GMT
நெல்லை:
நெல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சருக்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் நெல்லை வழியாக சென்றார். அவருக்கு பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முதல்-அமைச்சருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனர்.

கலந்து கொண்டவர்கள்

வரவேற்பு நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, ஞானதிரவியம் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், துணைத்தலைவர் செல்வலட்சுமி அமிதாப், முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், யூனியன் தலைவர்கள் கே.எஸ்.தங்கபாண்டியன் (பாளையங்கோட்டை), ஸ்ரீலேகா (மானூர்), சவுமியா ஆரோக்கிய எட்வின் (நாங்குநேரி), மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை,
முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிரகாம்பெல், கணேஷ்குமார் ஆதித்தன், நெசவாளர் அணி பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் நாங்குநேரி ஆரோக்கிய எட்வின், சுடலைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சரிடம் ஏராளமானவர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

மேலும் செய்திகள்