தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இடுகாடு இன்றி தவிக்கும் மக்கள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கரியமாணிக்கம் (மேற்கு) ஊராட்சிக்கு உட்பட்ட வாத்தலை அம்பேத்கர் தெருவில் ஆதிதிராவிடர் குடும்பங்களை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக இடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை எரிக்க இப்பகுதி மக்கள் பெரிதும் தவிர்த்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இடுகாடு அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வாத்தலை, திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கீரைகள் மேடு கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லை இதனால் மழைநீர் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த நீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் மண் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பழனியப்பன், கீரைகள் மேடு, திருச்சி.
இதேபோல் திருச்சி உய்ய கொண்டான் திருமலை சண்முகா நகர் 5-வது குறுக்கு தெரு மேற்கு பகுதியில் வடிகால் வசதி இன்றி கடந்த சில நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முத்து, சண்முகாநகர், திருச்சி.
உப்பின் தன்மை அதிகமாக உள்ள குடிநீர்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கரட்டாம்பட்டி ஊராட்சியில் 2-வது வார்டு பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீராக பொன்நகர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த குடிநீர் போர்வெல் தண்ணீரானது உப்பின் தன்மை அதிகமாக இருப்பதால் இதைதான் இப்பகுதி மக்கள் குடித்து வருகின்றன.
மேலும் தொட்டியின் மூடியானது பழுதாகி உள்ளதால் அந்த மூடி வழியாக விலங்குகளான குரங்குகள் மற்றும் பறவைகள் சிறுநீர் மற்றும் விலங்குகளின் கழிவு இந்த நீரில் கலந்து குடிக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றன. இந்த போர்வெல் தண்ணீர் உப்பின் கடினத்தன்மை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப் படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆனந்தன், கரட்டம்பட்டி, திருச்சி.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி மாவட்டம், காஜாமலை முதல் முஸ்லிம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது மழைகாலம் என்பதால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காஜாமலை, திருச்சி.
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், 34-வது வார்டு சுப்ரமணியபுரம், சுந்தராஜ் நகரில் முறையாக கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் , சுப்ரமணியபுரம், திருச்சி.
இதேபோல் திருச்சி மாவட்டம், திருவரம்பூர் தாலுகா, கிருஷ்ணசமுத்திரம் பஞ்சாயத்து எழில் நகர் ரோஜா தெரு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், எழில்நகர், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் கிராமத்தில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படாததால் அப்பகுதியில் சேகாரமாகும் குப்பைகளை அப்பகுதி மக்கள் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் மழைபெய்யும்போது குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பத்மநாதன், மால்வாய், திருச்சி.
தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாவட்டம், தென்னூர்இனாம்தார்தோப்பு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் மண்ணைகொட்டி அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லவும், மழைநீர் செல்லவும் வழியின்றி மழைபெய்யும்போது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கிநிற்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் , தென்னூர், திருச்சி.
வடிகால் வசதி வேண்டும்
புதுக்கோட்டை டவுன் காமராஜபுரம் ஆசிரியர் காலனி மன்னிப்பவன் சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காமராஜபுரம், புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா தெம்மாவூர் முதல் கந்தர்வகோட்டை செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தெம்மாவூர், புதுக்கோட்டை.
பஸ் இயக்க கோரிக்கை
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளூர் கிராமத்துக்கு புதுக்கோட்டை நகர் கிளையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து செட்டியாபட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது அந்த பஸ் முள்ளூர் ஊருக்குள் வந்து சென்றது. தற்போது வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ்குமார், முள்ளூர், புதுக்கோட்டை.
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் கடாரங்கொண்டான் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நீர்த்தேக்க தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யாத நிலையில், தூய்மையற்ற குடிநீரை தொடர்ந்து பருகி வருவதால் ஊர் பொதுமக்கள் நோய்வாய்ப்பட அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அஸ்வின்குமார், கடாரங்கொண்டான், அரியலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் மேற்கு, எம்.ஜி.ஆர். நகரில் காலை நேரத்தில் துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கே வந்து குப்பைகளை சேகரித்து செல்கின்றனர். ஆனால் சிலர் அவர்களிடம் குப்பைகளை சேகரித்து கொடுக்காமல் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், எம்.ஜி.ஆர்.நகர், பெரம்பலூர்.
தவறாக எழுதப்பட்டுள்ள ஊர்பெயர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் கிராமம் உள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊரை அறிந்துகொள்ளும் வகையில், எழுமூர் கிராமத்தில் இருந்து முருக்கன்குடி செல்லும் சாலையோரத்தில் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்ப்பலகையில் ஊர் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதில் எழுமூர் என்பதற்கு பதிலாக எழுழூர் என தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து இந்த ஊருக்கு வருபவர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நல்லுசாமி, எழுமூர், பெரம்பலூர்.
பயனற்ற நீர்த்தேக்க தொட்டி
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம் வன்னி மலை பகுதியில் சுமார் 150 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டி அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வன்னி மலை, பெரம்பலூர்.
கூடுதல் பஸ் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மாணவ-மாணவிகள் தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி பயின்று வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் தஞ்சாவூருக்கு தினக்கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஏலாக்குறிச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்ல காலையில் 6 மணி முதல் 8.30 மணி வரை ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் உள்ளது. இதிலேயே கர்ப்பிணிகள், முதியவர்கள், மாணவர்கள், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிவதுடன் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நவீன்குமார், ஏலாக்குறிச்சி, அரியலூர்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சியில் உள்ள நடுத்தெரு கடைசியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரஹீம். நடுத்தெரு, பெரம்பலூர்.
இதேபோல் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி, வடசேரி கோனார் நகரில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இந்த மின் கம்பத்தை சுற்றிலும் நிறைய வீடுகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
பொதுமக்கள், வடசேரி, கரூர்.
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வாய்க்கால் பணி
கரூர் மாவட்டம் 48-வது வார்டு வெங்கக்கல்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரும், மழைநீரும் செல்ல வழியின்றி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லோகநாதன், வெங்கக்கல்பட்டி, கரூர்.
நாய்களால் பொதுமக்கள் அச்சம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம் நெடுஞ்சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் வாகனங்கள் செல்லும்போது திடீரென குறுக்கே பாய்ந்து ஓடுவதினால் நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் சாலையில் பொதுமக்கள், குழந்தைகள் நடந்து செல்லும்போது நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும்போது எங்கு தங்களை கடித்துவிடுமோ என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துரையரசபுரம், புதுக்கோட்டை.